வீடு வாங்கி தர இருந்த இயக்குனர்..!! அகோரி கலையரசன் வெளியிட்ட வீடியோ..!!
முன்பெல்லாம் சினிமா, அரசியல், விளையாட்டு, வணிகம் ஆகிய துறைகளில் வெற்றிப் பெற்ற பிரபலங்களை தான் ஊடகத்தில் பேட்டி எடுத்து வந்தன். ஆனால் தற்போது உள்ள காலக்கட்டத்தில் மிகவும் வித்தியாசமாக உள்ள மனிதர்களையும், முட்டாள் தனமாக நடத்துக் கொள்ளும் நபர்களையும் தேடி தேடி பேட்டி எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு பேட்டி எடுப்பதால் அவர்களும் பிரபலமாகி நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் இந்த ஒரே விஷயத்திற்காக மிகவும் சகஜமாக இருக்கும் நபர்களும் ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காக முட்டாள்களை போல் நடித்து தன்னையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றி வருகிறார்கள்.
அப்படி வித்தியாசமாக நடந்துக் கொண்டு தன்னை அகோரி என்று அழைத்துக் கொண்டு Youtube வீடியோவில் வைரல் ஆனவர் தான் அகோரி கலையரசன். கோயம்புத்தூரை சேர்ந்த இவர், கடந்த சில மாதங்களாக பல்வேறு ஊடகங்களில் பேட்டி அளித்து ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார்.
ஆனால் சில காலங்களாக எந்தவொரு பேட்டியும் கொடுக்காத இவர் தற்போது மீண்டும் பல்வேறு திடுக்கிடும் தகவலை ஊடகத்திடம் கூறியுள்ளார். அதாவது,
அந்த பேட்டியில் பேசியிருப்பது :
“பிரபல இயக்குநர் ஒருவர் எனக்கு சமீபத்தில் செல்போனில் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பில், தன்னுடைய Document ஐ பூஜை செய்து தரும்படி என்னிடம் கேட்டிருந்தார். மேலும் கூடுவாஞ்சேரியில் எங்களுக்காக ஒரு வீடு தயார் செய்து வைத்திருப்பதாகவும் அங்கு வேலைக்கு 6 பேரை அமர்த்தியிருப்பதாகவும் கூறினார்.
இந்த இயக்குர் இவ்வாறு பேசியது என் மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. போக போக எனக்கும் சந்தேகம் ஏற்பட்டதால், அவரது செல்போன் அழைப்புகள் ஏற்பதை நானும் நிறுத்திவிட்டேன்.
அந்த இயக்குநருக்கு என் மனைவி மீது தான் கண்ணு :
அதன் பிறகு தான் அவரது உண்மையான சுயரூபமே தெரியவந்தது. நான் அவரது அழைப்பை எடுக்காததால் கண்டமேனிக்கு திட்ட ஆரம்பித்தார். அதன் பிறகே அவருக்கு என்னுடைய மனைவியின் மீது ஒரு கண் இருப்பது தெரியவந்தது.
இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது” என்று கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி இணையத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
யார் அந்த இயக்குநர் குழப்பத்தில் நெட்டிசன்கள் :
மேலும் அந்த இயக்குநர் யாராக இருக்கும் என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது யூகங்களை கூறி வருகின்றனர். ஒரு சிலர் அவர் சொல்வதற்கு காரணம் மீண்டும் ட்ரெண்டு ஆக தான் என்று கூறுகின்றனர்..
– பவானி கார்த்திக்