கல்வித்துறை கண்டுள்ள வளர்ச்சி..! அதற்கு செய்திகளே சாட்சி..! ஸ்டாலின் பெருமிதம்..!
தமிழ்நாட்டில் கல்வித்துறை வளர்ச்சியடைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திராவிட மாடல் அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி என பதிவிட்டுள்ளார்.
20 ஆயிரத்து 332 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி, மற்றும் 519.73 கோடி ரூபாயில் உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது என பதிவிட்டுள்ள முதலமைச்சர், பயணத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.