தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு ஒருவர் பலியான சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பார்த்திபன் 55 கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலையில் பார்த்திபனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா பாதிக்கப்பட்டு ஒருவர் பலியான சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Discussion about this post