தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையின் காரணமாக 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7000 படுக்க வசதிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. என திண்டுக்கல்லில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள 11333 அரசு மருத்துவ நிர்வாகங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
ஒமைக்கிரானின் உருமாற்ற வைரஸ்கள் தற்போது கூடுதலாக ஆக தொடங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3038 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 186 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் திண்டுக்கல்லில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களான சென்னை மதுரை கோயம்புத்தூர் திருச்சி ஆகிய விமான நிலையங்களில் ரேண்டமாக இரண்டு சதவீதம் பேருக்கு ஆர்.டி.பி.சி பரிசேதனை செய்யப்பட்டு வந்தது.
இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருவருக்குத்தான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் தற்போது துபாய் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு பத்து பதினைந்து பேர் என்ற அளவில் பாதிப்பு கூடிய உள்ளது. ஒமிக்கிரான் வைரஸ் உருமாற்றம் பெரும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை.
பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை பெற்று 6 நாட்கள் தனிமையில் இருந்தால் குணமாகிவிடும்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. பெரிய அளவில் பதட்டமோ அச்சமோ கொள்ள தேவையில்லை பாதுகாப்பாக இருந்தாலே குணப்படுத்தி விடலாம்.1021 மருத்துவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு ஏப்ரல் 25, 26ம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
1021 மருத்துவர் பணியிடங்களுக்கு 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிதி அறிக்கையில் மருத்துவத்துறையில் எவ்வளவு காலி பணியிடங்கள் உள்ளதோ அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் 90 சதவீதம் பேருக்கு எதிர்ப்பு சக்திகள் அதிக சிறப்பாக உள்ளது. அதன் Opportunities தமிழகத்தில் இறப்புகள் இல்லாமல் உள்ளது எனத் தெரிவித்தார்.