கணவர் கருப்பாக இருந்ததால் பெண் செய்த கொடுர செயல்..!
மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் விஷால் மோகியா (24) இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமான நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
இந்தநிலையில் திருமணமான நாளிலிருந்து அவரது மனைவி விஷால் மோகியா நிறத்தை காரணம் காட்டி பிரச்சினை செய்து வந்ததோடு அவரை கேலியும் செய்துள்ளார். அடிக்கடி நிறத்தை காரணம் காட்டி தன் கணவருடன் அவர் தகராறு செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து குழந்தை பிறந்தவுடன் தன் குழந்தையை கணவரின் வீட்டில் போட்டுவிட்டு தனது தாய் வீட்டிற்கு அவரது மனைவி சென்று விட்டார்.
பின்னர் தன் மனைவியை அழைத்து வருவதற்காக அவர் சென்றபோது நிறத்தை காரணம் காட்டி அவருடன் செல்ல மனைவி மறுத்துவிட்டார். இதனால் விஷால் மற்றும் அவருடைய தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்துள்ளனர். பெற்ற குழந்தையை கணவரின் நிறத்தை காரணம் கூறி தாய் விட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”