நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணிக்கு நடைப்பயணம்..!
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலயத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஜெபமாலை அணிந்து நடை பயணம் தொடங்கினர்.
சேத்துப்பட்டு போளூர் சாலையில் உள்ள தூய லூர்து அன்னை தேவாலயத்தில் இன்று காலை நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் வேளாங்கண்ணி மாதாவிற்கு 40 நாட்கள் ஜெபமாலை அணிந்து விரதம் இருந்து, வரும் 29ஆம் தேதி நடைபெறும் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்தை காண நடைபயணம் மேற்கொண்டனர்.
இந்த நடைப்பயணத்தைசேத்துப்பட்டுஉதவி பங்கு தந்தை சதீஷ்ராஜ்சிறப்பு திருப்பலி நடத்தி துவக்கி வைத்தார். வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், உதவி பங்கு தந்தை வினோ அல்போன்ஸ் சேத்துப்பட்டுலூர்து நகர், நிர்மலா நகர் பங்கு பேரவை துணைத் தலைவர் இயேசுபாதம், செயலாளர்வேளாங்கண்ணன், பொருளாளர், பிரேம்குமார்மற்றும் பங்கு பேரவை இறைமக்கள்அருட்கன்னியர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..