மேகம் கருக்குது மழை வரப்போகுது உங்க மாவட்டத்துக்கு…!! கொஞ்சம் அலார்ட் மக்களே..!!
மேற்கு திசையில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாட்டு காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
நாளை முதல் வருகிற செப்டம்பர் 23ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் தாழ்வான பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 24ம் தேதி முதல் 25ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..