தன்னம்பிக்கையே வெற்றியை கொடுக்கும்..!! குட்டி ஸ்டோரி-8
ஒரு நட்டோட மன்னர் ஏன் அரண்மணை கதவை யாரு தொறக்குறாங்களோ அவங்களுக்கு ஏன் நாட்டில இருக்க இடத்தை தரேன் அப்படினு அறிக்கை தராரு.. ஆனால் கதவ நீங்க திறக்கலான உங்க இரண்டு கையையும் வெட்டிடுவேன் அப்படினு சொல்லுறாரு
இந்த அறிக்கையை கேட்ட அப்புறம் அங்க இருந்த யாருமே இந்த போட்டிக்கு முன்வரல.., ஒரு சின்ன பையன் மட்டும் சரி நம்ம பண்ணலாம் அப்படினு வரான்
அங்க இருக்குறவங்க எல்லாரும் நீ போன உன் கையே பரிபோயிடும் அப்படி சொல்லி பயம் காட்டுறாங்க,
அதுக்கு அந்த குட்டி பையன் சொல்லுறான் நான் போய் அந்த போட்டில ஜெயிச்சிட்டானா அந்த நாட்டோட பாதி இடம் கிடைக்கும்.
ஒருவேளை நான் தோத்து போயிட்டா ஏன் கை மட்டும் தான போகும்.., உயிர் போகதுல அப்படினு சொல்லிட்டு தைரியமா போறான்.
போய் கதவ திறக்குறான் அங்க இருக்குற கதவு உடனே திறக்குது, அங்க இருக்குறவங்க எல்லாருக்கும் ஒரே ஆச்சிரியம்.. என்னடா இது ஈசியா கதவு திறக்குது ..?
அப்போ தான். மன்னர் சொல்லுறாரு இங்க இருக்குறவங்கள தன்னம்பிக்கையான ஆள் யாருனு தேடிட்டு இருந்தன். அதுக்காக தான், நான் இந்த போட்டியே சொன்னேன் ஆனா நீங்க யாரும் தன்னமிக்கையா இல்ல
அப்படினு சொல்லிட்டே அவருக்கு அந்த பாதி இடத்தையும் தறாங்க…
இதே மாதிரி தாங்க “நம்ப வாழ்க்கையும், இதை பண்ணா தோத்துருவோமோ அப்படிங்கிற பயத்துலையே நிறைய வாய்ப்பை முயற்சி பண்ணாமலே விட்ருவோம்”. தோற்று போனாலும் அதுல கிடைக்கிற அனுபவத்தை வைத்து ஜெயிக்க கத்துக்கணும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..