குழந்தையால் உயிருக்கு ஆபத்து.. பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை நீரில் முக்கி கொன்ற தாத்தா..!
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் மற்றும் சங்கீதா தம்பதியினருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததால் சங்கீதா தனது தாய் வீட்டில் தங்கி இருந்த நிலையி்ல் கடந்த 14ம் தேதி தூங்கி கொண்டிருந்த குழந்தை தண்ணீர் பேரலில் மூழ்கிய நிலையில் உயிரிழந்தது.
இதனால் சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டான் போலீீசார் குழந்தையின் தாத்தா பாட்டியிடம் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொன்றதாக குழந்தையின் தாத்தா வீரமுத்து பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் ”இந்த குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து மற்றும் கடன் பிரச்சனை ஏற்படும் என ஜோதிடர் ஒருவர் கூறியதால் அதனை நம்பி முதலில் கொண்டு எங்காவது விட்டுவிடலாம் என நினைத்தேன் ஆனால் என் உயிர் மீது இருந்த பயத்தினால் குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டு கொன்று விட்டதாக” அவர் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் கூறியதை உண்மை என நம்பி தனது பேரனை கொன்ற தாத்தாவால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
பின்னர் அவரை கைது செய்த போலிசார் உட்கோட்டை வீட்டில் வைத்து வீரமுத்து குழந்தையை எப்படி கொன்றார் என்பதை சாட்சிகள் முன்னிலையில் நடித்துக் காட்டி, போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
-பவானி கார்த்திக்