சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து விளையாட்டு வீராங்கனையுமான பிரியா கால்வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்த பிரியாவின் வீட்டிற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
கால்பந்து வீராங்கனையான பிரியா கடந்த சில நாட்களாக கால்வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டார். இந்நிலையில் கொளத்தூர் மருத்துவமனையில் கவன குறைவான சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தினால் பிரியா உயிரிழந்தார். அதையடுத்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மெது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமண்யன் தெரிவித்தார்.
இந்நிலையில் உயிரிழந்த பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்,
பிரியாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய பின் பிரியா வென்ற பதக்கங்கள் மற்றும் அவரின் சாதனைகள் குறித்தும் ப்ரியாவின் பெற்றோர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அவருக்கு கால்பந்து விளையாட்டின் மீதானா ஆர்வத்தியும் கேட்டறிந்தார்.
மேலும் அரசு அறிவிப்பின் படி பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான ஆணைம் மற்றும் அரசு சார்பாக வீடு ஒதுக்கப்பட்டு அதற்கான ஆணையத்தையும் ப்ரியாவின் குடும்பத்திற்கு வழங்கினார்.