இன்று அதிகாலை 5 மணியளவில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. டிரான்பார்மரில் ஏற்பட்ட கோளாறால் தீவிபத்து நடந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரயவந்துள்ளது. விபத்து ஏற்பட்ட பகுதியை அமைச்சர் மா.சுப்புரமணியன் நேரில் பார்வையிட்டார்.
அதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், மெட்ரோ ரயில் பணிகளுக்கான மின்சாரம் சார்ந்த பணிகளின் டிரான்பார்ம் மாணவர் விடுதிக்கு அருகில் இருந்து செயல்பட்டு வருவதால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. டிரான்பார்ம் பாதிக்கப்பட்டுள்ளதால் மின்தடை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும்,இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் இயங்கி வருகிறது, தினசரி 6 லட்சத்திற்கு மேலான புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்துவிட்டது. அது ஒன்றை காரணம் ஜாதி மொத்த துறையையும் குறை கூறவேண்டாம் தவனுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் திருத்தி கொள்கிறோம் என்று அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.