சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், புதிய கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு உடன் இருந்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார் அதை தொடர்ந்து இன்று காலை சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், புதிய கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 13 திருக்கோயில்களில் இராஜகோபுரங்கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள், அர்ச்சகர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, வணிக வளாகம், மலைப் பாதை சீரமைத்தல், மதிற்சுவர் கட்டுதல் போன்றவற்றிற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 56.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சர் முக ஸ்டாலின் ஒருங்கிணைந்த மண்டல இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்கள் கட்டுதல் போன்ற 16 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர் சேகர் பாபுவும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.