ADVERTISEMENT
குட்கா முறைகேடு வழக்கில்.. சிபிஐ அதிகாரி நேரில் ஆஜராகனுமா..??
குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குட்கா முறைகேடு தொடர்பாக வழக்கில் முன்னாள் அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையா் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 2022 ஆம் தமிழக அரசு ஆண்டு அனுமதி வழங்கியது.
இதையடுத்து, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி தரவில்லை என்றும் காலஅவகாசம் கோரியும் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் இதே காரணத்தை இன்றைய விசாரணையின்போது சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இதையடுத்து, சிபிஐயின் விசாரணை அதிகாரி, வரும் 21-ஆம் தேதி நேரில் ஆஜராக விளக்கம் அளிக்கக் கோரி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.