பயிரை மேய்ந்த ஒட்டகம்.. காலை வெட்டிய நபர்.. வாயில்லா ஜீவனுக்கு நடந்த கொடுமை..!
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சங்கார் மாவட்டத்தில் முந்த் ஜாம்ரோ என்ற கிராமத்தில் சூமர் கான் என்பவருக்குச் சொந்தமான ஒட்டகம் ஒன்று மேய்ச்சலுக்காக சென்றது.
அப்போது திடிரென , வேறு ஒருவருக்கு சொந்தமான வயல்வெளிக்குள் நுழைந்து பயிர்களை மேய்ந்துள்ளது.
அதனைக் கண்ட அந்த நிலத்தின் உரிமையாளர் மற்றும் அங்கு வேலை செய்து கொண்டிருந்த சிலர் சேர்ந்து அந்த ஒட்டகத்தை பிடித்து அடித்துள்ளனர்.
அடித்ததுமட்டுமல்லாமல் அதன் ஒரு காலை வெட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமிபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்யக்கோரி கமென்ட் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒட்டகத்தின் உரிமையாளர் சூமர் கான், தனது ஒட்டகத்தின் காலை வெட்டியர்கள் மீது புகார் கொடுக்க மறுத்துவிட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
-பவானி கார்த்திக்