நடிகர் விஜய் சொன்ன “c” டீம்..!! அமைச்சர் ரகுபதி பதில்..!!
தமிழக வெற்றிக் கழகம் என்பது பாரதிய ஜனதா கட்சியின் C டீம் எனவும் தவெக மாநாடு என்பது அரசியல் மாநாடு அல்ல.. சினிமா மாநாடு என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தலைவர் விஜய் பேசியதற்கு இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்..
ஒரு கட்டத்தில் திமுகவின் திராவிட மாடல் அரசை நடிகர் விஜய் நாடியிருந்தார், ஆனால் இப்போது அதே திமுகவை ஊழல்வாதிகள் என்றும் தங்களது அரசியல் எதிரிகள் என்றும் கூறுகிறார்…
நம் தமிழக அரசு செய்துள்ள நலத்திட்டங்களை மக்கள் மனதில் அச்சாரம் போல பதிந்துள்ள நிலையில் அதனை மக்கள் மனதில் இருந்து யாராலும் நீக்க முடியாது..
நம்முடைய கொள்கைகளுக்கு விஜய் விளக்கம் கொடுத்து இருக்கிறார் என சொல்லலாம்..
உழைப்புக்கு பெரும் எடுத்துக் காட்டாக இருப்பவர் தான் நம் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவர் கொண்டு வந்த அனைத்து திட்டாங்களும் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக இருக்கிறது.
அப்படி இருக்கும் போது புதிதாக கட்சி தொடங்கிய ஒருவர் எப்படி பல ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கும் ஒரு கட்சியை பற்றி எப்படி விமர்சிக்க முடியும்..
பாரதிய ஜனதா கட்சியின் C டீம் தான் தமிழக வெற்றிக் கழகம்., இப்போதே அவர் மற்றவர்களை நாடும் வகையில் கூட்டணிக்கு அழைக்கிறார்.. எல்லாமே வெறும் நாடகம் தான் என இவ்வாறே அவர் பதில் அளித்தார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..