பட்டப் பகலில் பாட்டிக்கு நேர்ந்த கொடூரம்..! பரபரப்பான மதுராந்தகம்..!
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே கடமலைபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி. இவரது மனைவி முனியம்மாள் (வயது 85).இவர் தனது மகன் ஏழுமலை வீட்டில் வசித்து வருகிறார் தனது வீட்டின் எதிரே அமர்ந்திருந்தார்.
அப்பொழுது, அடையாளம் தெரியாத பெண் சேலையின் துணியால் முகத்தை மூடியவாறு முனியம்மாள் பின்புறமாக வந்து கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்கச் செயினை பறித்துள்ளார். மேலும், பாட்டின் இரு காதிலும் இருந்த கம்மலை பறித்துள்ளார்.
இதனால் மூதாட்டியின் காது அறுந்து வலி தாங்காமல் சத்தம் போட்டுள்ளார். இதனால் மர்ம நபர், அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முனியம்மாள் மகன் ஏழுமலை சத்தம்கேட்டு வெளியே வந்து பார்த்த பொழுது காதரத்து யாரும் இல்லாத தனது அம்மாவின் நிலை குலைந்த நிலையைக் கண்டு அதிர்ந்தார்..
மேலும், மூதாட்டியிடம் செயின் பறிக்க வந்த பெண் தனது முட்டியால் மூதாட்டி தாக்கவே வலியால் துடித்து உள்ளார். அதன் பின்னர் தனது அம்மாவை அச்சரப்பாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது அங்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ