ஈரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..! போலீஸ் அதிரடி நடவடிக்கை..! பரபரப்பான கரூர்..!
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போக்குவரத்து நகர் பகுதியில் சார்ந்த சுமதி அறிவுக்கரசு தம்பதியினர் தனது மகன் திருமணத்திற்காக சுமதி உறவினர் வீட்டிற்கு அழைப்பிதழ் வைத்து விட்டு திண்டுக்கல்லிருந்து ஊர் திருமுன்பு நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கரூர் செல்வதற்காக ஈரோடு அரசு பேருந்தில் பயணிக்கின்றார்.
அதனைத் தொடர்ந்து கரூர் பேருந்து நிலையத்தில் பேருக்காக ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில் சுமதியை ஒரு சில மர்ம நபர்களால் பெண்ணென்றும் பாராமல் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர்.
அப்பொழுது பாதுகாப்பிற்காக சுமதி கால்களால் எட்டி உதைக்கிறார்.. இதனைத் தொடர்ந்து கரூர் பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி ரோந்து வாகனத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவதிக்குள்ளாகி பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார்.
மேலும் மது போதையில் இருந்த நபர்கள் இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த அரசை கண்டிப்பதாகவும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை வேண்டும் என அப்பொழுது சுமதி தெரிவித்தார்.
மக்கள் சமூக நீதி பேரவையில் மாநில பொருளாளராக உள்ள சுமதி கரூரில் இருந்து சேலம் செல்வதற்காக 1- 2 – 1 பேருந்தில் பயணம் செய்வதற்காக காத்திருந்தேன் சம்பந்தமில்லாத ஒரு நபர் ரூம் போடுகிறேன்.. வா என்று அழைத்திருக்கிறார்.
அப்பெண்மணி அவரை எட்டி உதைக்கும் பொழுது அப்பேருந்தில் உள்ள கண்டக்டர் போலீஸ் இருந்தால் கூப்பிடுங்கள் போலீஸ் வாகனம் பேருந்து நிலையத்திற்குள் இருந்தாலும் அதற்குள் போலீசார் இல்லை என்று புகார் தெரிவித்தார்.
சுற்றி சுற்றி எந்த ஒரு காவல்துறை அதிகாரிகளும் இல்லை மது போதையில் இருந்த நபரை அவரை அடிக்க முடியாது கை வைக்க முடியாது எங்கள் மேல் புகார் ஆகிவிடும் என்று கூறும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என்று கூறினார்.
காவல்துறையினர் நாடுகள் என்று கூறிய நிலையில் அப்பொழுது காவல் துறையினரின் சிசிடிவி வாகனங்கள் உள்ள நிலையில் அதில் காவல்துறையினர் இல்லை என்று புகார் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து காவல் உதவி மையம் 100க்கு போன் செய்தும் அருகாமையில் உள்ள கரூர் நகர ஆய்வாளருக்கு போன் செய்தும் யாரும் போன் எடுக்கவில்லை சிசிடிவி காட்சிகள் மூலமாக பல்வேறு ஆதாரங்கள் உள்ளதாக சுமதி தெரிவித்தார்..
அதனை தொடர்ந்து மது போதையில் உள்ள நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது…
அதற்காகத்தான் இத்தனை மதுபான கூடங்கள் திறந்து பெண்களை ஆண்கள் அழைப்பார்கள் அவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்காமலும் ஆண்கள் தொட மாட்டார்கள் என்று சொல்வதற்கு தான் காவல்துறை உள்ளதா பெண்களுக்கு என்ன தான் பாதுகாப்பு உள்ளது.
தமிழக முதல்வர் இதற்கு உரிய தீர்வு அளிக்க வேண்டும் மன உளைச்சலுக்கு ஆளாகி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெண்மணி சுமதி கூறியுள்ளார். பெண்களின் இடுப்பில் கை வைக்கும் நபர்கள் அதிகரித்து உள்ளனர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைத்து ஆண்களுக்கு முழுமையாக பார்களை திறந்து வைத்து எந்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பெண்களுக்கான காவல் நிலையத்தில் மூடி விட்டு செல்லட்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் சுமதியை சேலம் மார்க்கமாக செல்லும் பேருந்திற்காக காத்திருந்த நிலையில் அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..