திருப்பூரில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! 9 சிறார்கள் கைது..!! பரபரப்பான திருப்பூர்..!!
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பெற்றோரை இழந்த நிலையில் தனது தாத்தா வீட்டில் தங்கி வருகிறார்.., இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதவாது வாந்தி மயக்கம் என வந்துள்ளது.
சிறுமியின் உடல்நிலையை கண்ட உறவினர்கள், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.., அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை செய்துள்ளனர்.
அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.. சிறுமியின் வீட்டு அருகே உள்ள 9 இளைஞர்கள் சிறுமியை மிரட்டி அடிக்கடி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.., மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
பின்னர் இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் திருப்பூர் உடுமலை அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல்துறையினர். அப்பகுதியை சேர்ந்த ஜெயகாளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணிகுமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவாபாரதி (22) மற்றும் 14, 15, 16 வயது உட்பட்ட 3 சிறுவர்கள் என மொத்தம் 9 பேரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
அதன் பின் வழக்கு விசாரணை செய்த நீதிபதி 6 பேரை கோவை மத்திய சிறையிலும்., 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 3 பேரை கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.