17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..! கைதான வாலிபர்..!
ஈரோடு மாவட்டம் புதூர் அடுத்த பச்சப்பாளியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 24) கூலி தொழிலாளியான இவருக்கு ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
பின் தினேஷ் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். பின்னர் சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் தினேஷின் செல்போன் எண்ணை வைத்து போலீஸ் தேடி சென்று அவர்களை பிடித்துள்ளனர்..
பின் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் சிறுமியிடம் நீ இல்லை என்றால் நான் செத்துவிடுவேன் எனக்கூறி திருமணம் செய்துகொண்டதாகவும்.., பின் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் குழந்தை திருமண தடை சட்டப் பிரிவு மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் தினேஷ் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர்.