13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..! 3 பேர் கைது..! பின்னணியில் காத்திருந்த அதிர்ச்சி..!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி (வயது 13) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறுமி வீட்டில் இருந்துள்ளார். அவரது தாயார் லட்சுமி கூலி வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய நிலையில் சிறுமி மயக்க நிலையில் கிடந்துள்ளார்.
பின்னர் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்.., சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் விசாரித்ததில் ராஜேந்திரன், பன்னீர்செல்வம், சின்னத்தம்பி ஆகியோர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.
பின்னர் 1098 என்ற இலவச எண்ணுக்கு புகார் தெரிவித்தை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் “ராஜேந்திரன், பன்னீர்செல்வம், சின்னத்தம்பி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில்அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..