ஆசை காதலி உயிரிழந்ததை கண்ட காதலன்.. திடீரென எடுத்த விபரீத முடிவு..!
வேலூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு. இவருக்கு இந்து பிரியா (24) என்ற மகள் இருந்துள்ளார். பட்டதாரி பெண்ணான இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிமேகன் (27) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு வீட்டாருக்கும் தெரியவரவே இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்த நிலையில் வருகின்ற 10-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இதற்காக திருமண பத்திரிக்கையை இருதரப்பு பெற்றாரும் உறவினர்களுக்கு கொடுத்து வந்த நிலையில் நேற்று காலை இந்து பிரியா தோட்டத்துக்கு சென்றுள்ளார்.
அதன் பின் அங்குள்ளவர்களிடம் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு திடீரென தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இதை அறிந்த மணிமேகன் தன் காதலியை பார்க்க ஓடி வந்தார். அப்போது தன் காதலி உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் ஆசை காதலி மனைவியாக ஆக போகிறாள் என்ற சந்தோஷத்தில் இருந்த நேரத்தில் காதலி தற்கொலை செய்து கொண்டதை ஏற்றுகொள்ள முடியாத காதலன் மணிமேகன் வாழ்வதைவிட சாவதே மேல் என கருதி அங்கிருந்த கிணற்றில் குதித்து விட்டார். உடனே அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் மணிமேகனை உயிருடன் மீட்டனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்