கிரிக்கெட் விளையாட சென்ற சிறுவன்.. மின்சாரம் தாக்கிய சோகம்..!
மேற்கு டெல்லியின் கோட்லா விஹார் பகுதியில் உள்ள மைதானத்தில் 13 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, பந்து மைதானத்தின் ஓரத்தில் இருந்த இரும்பு போஸ்ட் கம்பத்தின் அருகே விழுந்துள்ளது.
இதனால் சிறுவன் அந்த பந்தை எடுக்க சென்றபோது சிறுவனின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு உபாத்யாத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் தொடர்ந்து இதுமாதிரியான மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவம் அரங்கேறி வருகின்றது . சமீபத்தில் கூட மீதாபூரில் 28வயது வாலிபர் ஒருவரும், பிந்தபூரில் டியூசன் முடித்து வீடு திரும்பிய 12வயது சிறுவனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்