பிரபல காபி ஷாப் கழிவறையில் கேமரா… இளம்பெண் பதிவால் அதிர்ச்சி..!
பெங்களூரில் BEL Road பகுதியில் third wave என்ற காபி ஷாப் இயங்கி வருகிறது. அப்பகுதியில் மிகவும் பிரபலமானதாக செயல்பட்டு வந்த இந்த காபி ஷாப்பிற்கு பெண் ஒருவர் இன்று காலை சென்றுள்ளார்.
அப்போது கை அலம்புவதற்காக கழிவறைக்கு சென்ற போது குப்பைத்தொட்டியில் கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் செல்போன் இருந்ததை கண்டு அப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஏரோபிலேன் மோடில் இருந்த அந்த போனில் ரகசியமாக ஆன் செய்யப்பட்டிருந்த கேமரா சுமார் 2 மணி நேரமாக கழிவறையை படம்பிடித்துள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டதை தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த செல்போன், அந்த காபி ஷாப்பில் பணிபுரியும் ஊழியருடையது என்று தெரியவந்தது. அவரை பணிநீக்கம் செய்துள்ள third wave நிர்வாகம், அவர் மீது உரிய எடுக்க தாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளது.
பிரபல காபி ஷாப் கழிவறையில் கேமரா வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்