ADVERTISEMENT
பழனியில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியவர்களுக்கு நடந்த சோகம்!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காரும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மனக்கடவு பகுதியில் பழனியில் இருந்து குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, கோவையில் இருந்து பெட்ரோல் ஏற்றுக் கொண்டு வந்த டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post