இந்த ஏழு கணபதிக்கு அப்படி என்ன சிறப்பு…?
கற்பக விநாயகர் – பிள்ளையார் பட்டி ( சிவகங்கை)
இங்கு விநாயகர் சதுர்த்தி அன்று வெள்ளி மூஷிக வாகனத்தில் கோவிலை வலம் வருவார். திருக்கார்த்திகை அன்று விநாயகர் மற்றும் சந்திரசேகர் திருவீதி ஊர்வலம் வருவார்கள். விநாயகர் சதுர்த்திக்கு 9 நாட்கள் முன்பு காப்பு கட்டி கொடியேற்றம் நடைபெறும். கடைசியாக 10ஆம் நாள் தீர்த்தவாதி பூஜை மற்றும் ராட்சத கொழுக்கட்டை சுவாமிக்கு நெய்வேத்தியமாக படையல் போடப்படும்.
ராஜகணபதி விநாயகர் – பொள்ளாச்சி ( கோயம்புத்தூர்)
இந்த கணபதி 100 வருடம் பழமை வாய்ந்தது. இங்கு மேற்கூரையில் விநாயகர் சிலை அமைந்துள்ளது. அரசமரத்து அடியில் அமைந்துள்ள ராஜகணபதிக்கு வலது பக்கம் கிருஷ்ணனும், இடது பக்கம் சிவபெருமானும் அமைந்திருக்கிறார்கள். ராஜகணபதியை வணங்குவோருக்கு குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது இங்குள்ள நம்பிக்கை.
கரும்பாயிரம் விநாயகர் – கும்பகோணம் ( தஞ்சாவூர்)
கும்பகோணத்திலேயே மூத்த விநாயகராக கரும்பாயிரம் விநாயகர் திகழ்கிறார். கும்பேஸ்வரர் கோவிலுக்கு வருபவர்கள் இந்த விநாயகரையும் தரிசிப்பது வழக்கமாக உள்ளது. சதுர்த்தி நாட்களில் இங்கு சிறப்பான பூஜைகள் நடத்தப்படுகிறது.
உச்சி விநாயகர் – மலைக்கோட்டை ( திருச்சி)
இந்த விநாயகர் மலையின் மீது 275 அடி உயரத்தில் அமைந்துள்ளார். 417 படிகளை ஏறி இந்த விநாயகரை வழிபட வேண்டும். பண்டிகை காலங்களில் இந்த விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இங்குள்ள ஆயிரங்கால் மண்டபம் சிறப்பு வாய்ந்தது.
இடுக்கு விநாயகர் – திருவண்ணாமலை
இங்கு மூலவர் விநாயகர் இல்லை. மூன்று வாசல் கொண்ட சிறிய குகை உள்ளது. கிரிவல பாதையில் குபேர லிங்கம் அருகில் இந்த விநாயகர் உள்ளார். இந்த விநாயகரை வழிபடுவோர்க்கு கை, கால், தலை மற்றும் இடுப்பு வலிகள் நீங்கும்.
படித்துறை விநாயகர் – அருப்புக்கோட்டை
தாலி பாக்கியத்தை வேண்டுவோர் வழிபட வேண்டிய சிறந்த கோவிலாகும். இங்கு விநாயகர் ஜடாமுனியோடு வித்தியாசமாக காட்சியளிக்கிறார். சதுர்த்தி மற்றும் பிரதோஷம் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நெற்குத்தி விநாயகர் – தீவனூர் ( விழுப்புரம்)
இந்த ஊர் விநாயகர் லிங்கம் வடிவில் காட்சியளிக்கிறார். மூன்று விழுது இல்லாத ஆலமரம் ஒன்றோடு ஒன்று இணைந்து இங்கு கோவிலின் பின்புறம் இருக்கிறது. இங்கு இன்றும் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது, பிறர் பொருளை ஏமாற்றுபவர்கள் மற்றும் அபகரிப்பவர்களுக்கு இது செயல்படுத்தப்படுகிறது.