பேருந்திற்கு வழிவிடாமல் சென்ற ஆட்டோ… விடாமல் அடித்த ஹாரன்.. அரிவாள் நீட்டி மிரட்டியதால் பரபரப்பு..!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து மஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து கொண்டோட்டி பகுதியில் சென்ற போது பேருந்துக்கு முன்னாடி சென்ற ஆட்டோ ஒன்று வழிவிடாமல் சென்றுள்ளது.
பேருந்து ஓட்டுநர் பலமுறை ஹாரன் அடித்தபோதும் வழிவிடமல் சென்ற ஆட்டோ ஓட்டுநர் திடீரென அரிவாளை எடுத்து வெளியே நீட்டியுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் அரிவாளை காட்டும் புகைப்படம் குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆட்டோ ஓட்டுநர் சம்சுதீன் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அரிவாளை கூர்படுத்துவதற்காக கொண்டு சென்றதாகவும் பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து பலமுறை ஹாரன் அடித்ததால் கோவத்தில் அரிவாளை காட்டியதாகவும் கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்