மாணவர்கள் கையில் புத்தகத்திற்கு பதில் கஞ்சா..!! போலிஸ் விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்..!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்கலையில் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஆந்திரா, பீகாரைச் சேர்ந்த இரு மாணவர்கள் கைது 550 கிராம் கஞ்சா பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாக வந்த தகவலை அடுத்து மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், தனிப்படை போலீஸார் கிருஷ்ணன்கோவில் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணன்கோவில் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்த ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திர ஒபுள் என்பவரது மகன் ராஜவிக்ரம் ஆதித்யா(20), பீகார் மாநிலம் ஆரோரியா மாவட்டத்தைச் சேர்ந்த நாகேந்திர பிரசாத் மகன் ரோகித்குமார்(21) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து சிறு சிறு பொட்டலங்களாக இருந்த 500 கிராம் கஞ்சா, எடையளவு இயந்திரம், இரு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி கல்வி நிலையங்களில் போதை பொருள் விற்பனை தடுப்பு குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா பழக்கம் அதிகரித்து உள்ளதாக வந்த தகவல் குறித்து விசாரித்த போது, வட மாநிலங்களில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் அங்கிருந்து கஞ்சா கொண்டு வந்து, மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
சந்தேகத்திற்குரிய மாணவர்களை கண்காணித்து வந்து, இன்று காலை இருவரை கைது செய்துள்ளோம். இவர்கள் இருவரும் கலசலிங்கம் பல்கலைகழகத்தில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வருகின்றனர். அவர்கள் கல்லூரி விடுதியில் தங்காமல், தனியாக வீடு எடுத்து தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..