வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடளுமன்ற தேர்தலின் தாக்கம் இப்போழுதே தொடங்கியுள்ளது, அதிமுக தலைமை விவகாரமாக ஓபிஎஸ் இபிஎஸ் என்று இரு அணிகளாக பிரிந்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தும், அடிக்கடி டெல்லி பயணமும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் வரும் நாடளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி கேட்கபட்டது.
அதற்கு பதிலளித்த அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்குவோம், தேர்தலின் போது அதிமுக எந்த வடிவில் இருக்கிறதோ, தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ அவர்கள் என்ன விருப்பப்படுகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மக்களிடம் ஆளுங்கட்சி அதிருப்தியை பெற்று வருகிறது. 40க்கு 40 என்பதெல்லம் திமுகவின் வெற்று பிரச்சாரம் தான் என குறிப்பிட்டவர் உண்மைகள் 15 தொகுதி கூட வராது என்று விமர்சித்துள்ளார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அணி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்பதை அவர் இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.