அட்ஜெட்மெண்ட்க்கு ஓகே சொன்ன நடிகை..!
கண்ட நாள் முதல் படத்தின் மூலம் சைடு ஆர்ட்டிஸ்ட்டாக திரையுலகில் அறிமுகமானவர் ரெஜினா . தொடர்ந்து அழகிய அசுரா, கன்னடத்தில் வெளியான சூரியகாந்தி, தெலுங்கில் வெளியான சிவா மனசுலோ ஸ்ருதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் சிவகார்த்திகேயன், விமல் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.
அந்தப் படத்தின் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து அவர் ராஜதந்திரம், மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய படங்கள் நடித்தார்.தலைவியில் கெஸ்ட் ரோலும் நடித்துள்ளார்.
அவற்றில் ராஜதந்திரம், மாநகரம் மட்டுமே நல்ல வரவேற்பை கொடுத்தது. மற்ற படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. கடைசியாக தமிழில் கருங்காப்பியம் படத்தில் நடித்தார். மேலும் அவரது நடிப்பில் பார்டர், ஃப்ளாஷ்பேக், சூர்ப்பனகை ஆகிய படங்கள் தமிழில் வெளியாக இருக்கிறது.
சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை ரெஜினா பேசியிருந்தார். அதில், “என் திரையுலக வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் அட்ஜெஸ்ட்மெண்ட்” தொடர்பான அனுபவத்தை சந்தித்திருக்கிறேன். அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யலாமா என தொலைபேசியின் மூலம் ஒருவர் என்னிடம் கேட்டார்.
அதற்கான அர்த்தம் அப்போது எனக்கு புரியவில்லை. சம்பளத்தில்தான் அட்ஜெஸ்ட்மெண்ட் என்னிடம் கேட்கிறார் என நினைத்து கொண்டேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
அப்போது எனக்கு வயது 20, இதுகுறித்து எனது மேனேஜர் உங்களிடம் பேசுவார் என்று கூறிவிட்டேன். பின் தான் தெரிந்தது அவர் வேறு வகையான அட்ஜெஸ்ட்மெண்ட்டை பேசுகிறார் என்று.
அதன் பிறகு இந்த மாதிரியான சம்பவத்தை நான் தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை ஆனால் சில பெண்கள் இதுபோன்ற சம்பவங்களை எதிர் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதில் உண்மை பொய் இரண்டுமே இருக்கிறது. சிலர் கதைகளை உருவாக்கி பொய்யையும் சொல்வார்கள். உண்மை என்னவேன்று அவர்களுக்குத்தான் தெரியும் என்றார்.
சினிமாவில் அட்ஜெட்மெண்ட் பல வருடங்களாக இருந்து கொண்டேதான் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் வரை பெரும்பாலான நடிகைகள் பொதுவெளியில் பேசியதில்லை.
தற்போது பலரும் பேசிவருகிறார்கள். நடிகை நயன்தாராக் கூட தன்னிடமும் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசியிருக்கிறார்கள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..