அண்ணாமலையின் கூற்றில் உண்மையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையார் புற்றுநோய் மருத்துமனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் பார்வையாளர்கள் தங்குமிடம் கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்வு மற்றும் ஆய்வினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,
அப்போது அண்ணாமலை சமூக வலைதள பதிவு குறித்து பதில் அளித்த அமைச்சர்,
அதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகம் தனியார் கம்பெனிக்கு கொடுக்கப்படுகிறது அது, தடை செய்யப்பட்ட கம்பெனிக்கு வழங்கப்படுகிறது என்று சொன்னார். பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட கம்பெனிக்கு கான்ட்ராக்ட் கொடுத்ததாக சொல்கிறார்.
இந்தத் திட்டம் தொடங்கியதில் இருந்து அதிமுக அரசு அந்த கம்பெனிக்கு தான் டெண்டர் கொடுத்து வந்தனர். இந்த அரசு வந்ததும் ஏன் கேட்கிறார்கள் என்றார்?
அவர் குறிப்பிடும் கம்பெனி பிளாக் லிஸ்ட் இல்லை அப்படி இருந்திருந்தால் டென்டரில் கலந்து கொள்ள முடியாது. நான் உறுதியாக சொல்கிறேன், அவர் சொல்லும் கம்பெனி பிளாக் லிஸ்ட்ல் இல்லை. அவர் கூறுவதில் உண்மையில்லை. ஆவின் -ல் ஹெல்த் மிக்ஸ் தயார் செய்ய வையுங்கள் அதில் வாங்கிக் கொள்ளலாம் என்றார்.
மகப்பேறு முத்துலட்சுமி ரெட்டி நிதி உதவி திட்டத்தில் சிறு குளறுபடி மத்திய அரசு அமைச்சகத்தின் இருப்பதாகவும் அந்தக் குளறுபடி சரி செய்யப்பட்ட பிறகு நிலுவையில் உள்ளவர்களுக்கு அந்தத் தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.