மாநாடு முடிந்தும் நிர்வாகிகள் செய்த செயல்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
நடிகர் விஜயின் கட்சி மாநாடு முடிந்து விட்டாலும் தவெக மாநாட்டு திடலுக்கு பலரும் சென்று செல்பி போட்டோ வீடியோ எடுத்து மகிழ்கின்றனர்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைப்பெற்றது. தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பரித்தனர்.
கூட்டம் முடிந்து அனைவரும் சாரை, சாரையாக அங்கிருந்து கலைந்து சென்றனர். தொண்டர்கள் சென்றுவிட்டாலும் இப்போதும் இங்கு கூட்டம் வந்து கொண்டிருக்கிறது.
மாநாட்டுக்கு நேரடியாக சென்று பங்கேற்க முடியாதவர்கள் அவ்வழியே வாகனங்களில் செல்பவர்கள் என பலரும் ஆர்வமுடன் மாநாட்டு திடலை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். பொதுமக்கள் அங்கே சென்று போட்டோ, வீடியோ எடுத்து செல்கின்றனர்.
இந்த செயல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..