போதையில் ராணுவ வீரர் செய்த செயல்.. வெளியான சிசிடிவி காட்சி…!
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த தாதங்குட்டை பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ராஜ்குமார் (29) இவர் இந்திய ராணுவத்தில் பஞ்சாபில் அவுல்தராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் 1 மாதம் விடுமுறையில் சொந்த ஊரான தாதங்குட்டை பகுதிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சின்னகந்திலி பகுதியில் உள்ள ஒயின்ஷாப்பிற்கு சென்று மது வாங்கி குடித்துள்ளார்.
அதனைதொடர்ந்து மீண்டும் இரவு ஒயின்ஷாப்பிற்கு சென்றுள்ளார். அப்போது ஒயின்ஷாப் மூடப்பட்டிருந்ததால் அருகே மது போதையில் இருந்து ராஜ்குமார் காலிமது பாட்டிலை எடுத்து ஒயின் ஷாப்பின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை உடைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து இன்று காலை வழக்கம்போல் ஒயின்ஷாப் ஊழியர் கடையை திறக்க வந்த போது சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக சிசிடிவி காட்சியை கைப்பற்றி இது குறித்து மதுபான கடை மேற்பார்வையாளர் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிசிடிவி காட்சியைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ராணுவ வீரர் ராஜ்குமார் சிசிடிவி கேமராவை உடைத்தது உறுதியானது பின்னர் ராணுவவீரர் ராஜ்குமாரை கந்திலி காவல் நிலையம் அழைத்து வந்து கந்திலி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இதேபோன்று மர்மநபர் யாரோ சிசிடிவி கேமராவை உடைத்துச் சென்றுள்ளனர்.மேலும் குடிபோதையில் மதுபான கடையின் சிசிடிவி கேமராவை ராணுவ வீரர் உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”