பேருந்தில் பயணித்த பெண்பயணிக்கு போக்குவரத்து போலீசார் செய்த செயல்… குவியும் பாராட்டுகள்…!
திருவண்ணாமலையில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி ஈசிஆர் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தில் பலர் பயணம் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அரசு பேருந்தில் பயணித்து வந்த உஷா என்ற பெண்மணிக்கு திருவான்மியூர் பகுதியில் பேருந்து செல்லும்போது உஷாவிற்க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பேருந்தில் மயங்கி விழுந்தார்.
திருவான்மியூர் தெற்கு அவெனியூ சாலையில் பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் அசோகன் அந்த உஷாவை போலீசார் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள திருவான்மியூர் சென்னை மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதித்து பெண்மணியின் உயிரை காப்பாற்றினர்.
அரசு பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்ட பெண்மணியை பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றிய சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்து போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
-பவானி கார்த்திக்