கோவிலில் நடிகை ரோஜா செய்த செயல்..! வைரலாகும் வீடியோ..! கடுப்பான மக்கள்..!
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான “திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி திருக்கோவிலில்” ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில், ஒவ்வொரு வருடத்திலும் இருமுறையாவது வருடாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், “மூலவர் பிரதிஷ்டை” என்று சொல்லப்படும் தை உத்தர வருஷாபிஷேகமும், அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம், மற்றும் ஆனி உத்தர வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் ஆனி உத்தர நாளான கடந்த ஜூலை 15ம் தேதி நடைபெற்றுள்ளது.
ஆனி உத்தர வருசாபிஷேகத்தை முன்னிட்டு, ஜூலை 15ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், கோயில் கும்பங்களுக்கு பூஜைகளும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமானத்திற்கு கொண்டுவரப்பட்டு, விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் பங்கேற்பதற்காக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மற்றும் அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி பங்கேற்று சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு வெளியே வரும் போது அங்கிருந்த பக்தர்கள், கோயில் பணியாளர்கள் என ஏராளமானோர் ரோஜாவிடம் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அப்போது கோயிலில் பணிபுரிந்து கொண்டிருந்த தூய்மைப் பணியாளர் பெண்கள் இருவர், மிகுந்த ஆர்வமுடன் நடிகை ரோஜாவுடன் புகைப்படம் எடுப்பதற்காக ஆசையோடு ரோஜாவின் அருகில் வந்து நெருங்கி நிற்க முயன்றுள்ளனர்.
அப்போது ரோஜா அந்த தூய்மைப் பணியாளர்களை சற்றுத் தள்ளி நிற்குமாறு சைகையில் கைகாட்டியுள்ளார். இதனால் சற்று தள்ளி நின்றபடியே தூய்மைப் பணியாளர்கள் ரோஜாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சில நெட்டிசன்கள், ரோஜாவின் செயலை மிகுந்த ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர், மேலும் அதற்கு ரோஜா பதில் அளிக்க வேண்டும் என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..