ஆரணி அருகே 41 ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டு விழா…
திருவண்ணாமலை ஆரணி அருகே 41 ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வடுகாசத்து கிராமத்தில் 41ம் ஆண்டு காளைவிடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த காளைவிடும் விழாவில் வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று வாடிவாசல் வழியாக துள்ளி குதித்து ஓடின.
இதில் வெற்றி பெற்ற காளைக்கு 70 ஆயிரம் ரூபாய் பரிசு உள்ளிட்ட 60 பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று ஆரவாரத்துடன் கண்டு களித்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.