மொட்டை மாடியில் ஓர் அந்த புறம்…!! எஸ்கேப் ஆன பெண்கள்…!! கால் கட்டு போட்ட போலிஸ்..!!
சென்னை முகப்பேரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது காவல்துறையினர் வருவதை அறிந்த பெண்கள், திடீரென முதல் தளத்தில் குதித்து தப்பி ஓட முயற்சித்தனர். அப்படி குதித்த பெண் ஒருவருக்கு இரண்டு கால்களும் முறிந்து போனது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர விபசார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில வாரங்களாகவே சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, விடுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று சென்னை முகப்பேரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சென்னை பெருநகர விபசார தடுப்பு பிரிவு காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது விபச்சாரம் நடக்கும் இடத்திற்கு போலீசார் வருவதை கண்ட 3 பெண்கள் முதல் தளத்தில் இருந்து குதித்ததுடன், அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதில் ஒரு பெண்ணுக்கு இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த 3 பெண்களையும் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சாலிகிராமத்தை சேர்ந்த பேன்சி (வயது 52) மற்றும் மதுரவாயலை சேர்ந்த அழகேஷ்வரி (41) ஆகியோர் 3 பெண்களையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்தபட்ட 3 பெண்களையும் போலீசார் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அதில் காயமடைந்த பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த விபச்சாரத்தில் பெண்களை தள்ளிய பேன்சி, அழகேஷ்வரி இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு சென்னை சாலிகிராமத்தில் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த அசாம் இளைஞரை விபசார தடுப்பு பிரிவு உதவி போலீசார் கைது செய்தனர்.
சாலிகிராமம் காந்திநகர், பெரியார் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அடிக்கடி இரவு நேரங்களில் வாலிபர்கள் பலர் வந்து செல்வதாக அந்த குடியிருப்பில் வசித்து வரும் குடியிருப்புவாசிகள், விபசார தடுப்பு பிரிவுக்கு கடந்த வாரம் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் தடுப்பு பிரிவு-1 காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி தலைமையிலான காவல்துறையினர், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் திடீரென அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது, அசாம் மாநிலத்தை சேர்ந்த பாலியல் இடைதரகர் ராகுல் என்கிற சஞ்ஜிப் ராய் என்பவர், இணையதள டேட்டிங் செயலி மூலம் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் சஞ்ஜிப் ராயை கைது செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண் ஒருவரை காவல்துறையினர் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..