ஷீரடி சாய்பாபா சொன்ன அந்த ரகசியம்..!!
நல்லவையோ, தீயவையோ உனக்கென்று விதித்த அந்த கர்ம பலனை நீ அனுபவித்தே ஆக வேண்டும். என்றார் ஷீரடி சாய்பாபா.
கடவுளை பலரும் தரிசனம் செய்யலாம். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டும் தான் மனதில் உண்மையான பக்தியுடன் தரிசனம் செய்கின்றனர்.
* மனதில் உண்மையான பக்தி இல்லாமல் வேண்டுபவர்களுக்கு, கடவுளின் குரல் கேட்காது.
* மற்றவர்களுக்கு கிடைக்காத வாழ்க்கை உங்களுக்கு கிடைத்துள்ளது. அதில் வஞ்சம் கொள்ளாமல் வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
* கஷ்டம் படும் ஏழைகளுக்கு உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள். அது உங்கள் அடுத்த தலைமுறை வரை காக்கும்.
* உண்மை எது என்று அறியாமல் யார் மீதும் குற்றம் சொல்லாதே.
* ஆணவத்தை வளர்ப்பதை விட்டுவிட்டு அறிவை வளர்த்திக்கொள்.
* அனைவரிடமும் அன்பை செலுத்து மனம் எப்பொழுதும் மகிழ்ச்சியில் இருக்கும்.
* கடவுளிடம் வேண்டுகோள் வைக்கும் பொழுது பணிவுடன் நடந்துகொள்.
* சுவாசித்தல் மட்டும் உயிர் வாழ்ந்து விடலாம் என்ற எண்ணத்தை வைத்துக் கொள்ளாதே, பிறருக்கு சேவை செய்தாலும் வாழலாம் என்ற எண்ணத்தை மனதில் பதித்துக்கொள்.
* பணத்தை காகிதமாக நினைத்துக்கொள், அதிகம் சேர்த்தால் அது குப்பை ஆகிவிடும் என ஏற்றுக்கொள்.
* மற்றவர் முன் மதிப்பில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், எந்த செயலிலும் செயல்படாதே. மற்றவர்கள் நன்கு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படு.
* பக்தியில் முழுமனதுடன் செயல்படு, மனம் அமைதியாக இருக்கும்.
* உனக்கென்று மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ்ந்து பார், நிச்சயம் கடவுள் உன்னை கவனிப்பார்.