அந்த மனசு தான் சார் கடவுள்.!! kpy பாலா கொடுத்த அடுத்த சப்ரைஸ் என்ன தெரியுமா..?
சில நாட்களுக்கு முன்பு உடல் ஊனமுற்ற நபருக்கு சின்னத்திரை நடிகர் KPY பாலா, இரு சக்கர வாகனம் ஒன்றை பரிசாக அளித்து, அவரின் தேவைக்காக ஒரு லட்சம் ரூபாயும் கொடுத்தார். அதை பலரும் பாராட்டினார்கள்.
அதன் தொடர்ச்சியாக தற்போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியில் பாட்டி வீட்டில் தாய் தம்பி உடன் வசித்து வரும் அஜித் என்னும் கல்லூரி மாணவன் இவர் மேல்மருவத்தூர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
அவருடைய தாய் வீட்டு வேலை செய்து மகன் அஜித்தை கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறார். இதனால் தாயின் பாரத்தை குறைக்க கல்லூரி மாணவன் அஜித் படிப்பு முடிந்த பிறகு பகுதி நேர வேலையாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு மாணவன் அஜித் பணியாற்றும் பெட்ரோல் பங்க் பெட்ரோல் போடுவதற்காக ஒரு நபர் வந்துள்ளார். அப்பொழுது அவர் அணிந்திருந்த ஹெல்மெட் கேமரா பொருத்தப்பட்டிருந்து அதைப் பார்த்த அஜித் அதனுடைய விலையை கேட்டார்.
அதற்கு அவர் 45 ஆயிரம் என கூறிய பொழுது உடனே தன்னறியாமல் பைக் ஓட்டுனரிடம் எனக்கும் பைக் வாங்கி ஓட்ட வேண்டும் என ஆசை தான் இருந்தாலும் எங்கள் வீட்டில் காசு கேட்டால் திட்டுகிறார்கள் சைக்கிள் வாங்குவதற்கு கூட என்னிடம் வழியில்லை என தனக்குள் உள்ள ஆசையை அவரிடம் கூறியுள்ளார்.
இதை கேமராவில் பதிவு செய்த நபர் சமூகவலைத்தளங்களில் பதிவிட, அதை பார்த்த சின்னத் திரை நடிகர் பாலா, இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு சமூக வலைதள பதிவில் பார்த்த மாணவன் வேலை செய்யும் பெட்ரோல் பங்கில் அவரிடமே பெட்ரோல் தான் புதியதாக கொண்டு சென்ற மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப சொல்லி பிறகு அவர் அணிந்திருந்த தலைக்கவசத்தை எடுத்து வாகனத்தினுடைய சாவியை அந்த மாணவனிடம் கொடுத்தார்.
இதை எதிர்பார்க்காத அந்த மாணவன் மெய்மறந்து கண் கலங்கியவாறு நடிகர் பாலாவை கட்டித்தழுவி நன்றி கூறினார்.
அந்த மாணவன் கூறுகையில் என்னுடைய நீண்ட நாள் கனவை நினைவாக்கிய சின்னத்திரை நடிகர் பாலா அவர்கள், நான் படிப்பை முடித்த பிறகு வேலைக்கு சென்று நிறைய சம்பாதித்து இதுபோன்று மற்றவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை நான் கட்டாயமாக செய்வேன் அதற்கு முன் உதாரணமாக நடிகர் பாலா அண்ணன் அவர்களை நான் மனதில் வைத்துக் கொண்டுதான் இந்த உதவியை செய்வேன்.
இன்று எனக்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் எங்கள் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் என ஏராளமானோர் போன் செய்து என்னை வாழ்த்துகிறார்கள். இதற்குக் காரணம் சின்னத்திரை நடிகர் பாலா அவர்கள் தான் அவர்களுக்கு மிக்க நன்றி என்று கூறி மாணவன் மனம் நெகிழ்ந்தார்.