தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனருமான சரத்குமார் உடல்நல குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் எந்த ஒரு வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று அவர் அறிக்கை வெயிட்டுள்ளார்.
பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயிற்றுபோக்கு காரணமாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வந்தது. மேலும் அவரை அவரின் மனைவி ராதிகா மற்றும் அவரின் மகள் வரலட்சுமி ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். இதனால் அவரது கட்சிக்காரர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.
இது குறித்து சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், சரத்குமார் சிறு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றுள்ளார். பரிசோதனை நிறைவு செய்து தற்போது பூரண நலத்துடன் சென்னை வந்துகொண்டிருக்கிறார். இது தொடர்பாக யாரும் எந்த ஒரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.