“ஸ்டுடென்ட்ஸ் வீட்ல, இருந்த Parents ஜெயில்ல”. இருக்கணுமா..?
சவுதி அரேபியாவில் தற்போது கல்விக்கு அதிக முக்கியதுவம் கொடுக்க தொடங்கியுள்ளது, சவுதி அரசின் இந்த முக்கிய நடவடிக்கையால் பெற்றோர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் பள்ளிக்கு லீவு எடுத்தால் பெற்றோர்கள் சிறை செல்ல வேண்டும் என்ற ஒரு சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தவுடன் சவுதி மக்களை பீதி அடைய செய்துள்ளது.
சவுதி வறண்ட பாளைவனமாக இருந்தாலும் கூட, பூமிக்கும் அடியில் இருக்கும் எண்ணெய் சவுதி அரேபியாவை சொர்க்க பூமியாக மாற்றியது. 1932ஆம் ஆண்டு உருவான சவுதி அரேபியாவிற்கு அதே வருடத்தில், ஜாக்பாட்டும் அடித்தது.
இப்படி வளமிக்க நாடு சில ஆண்டுகளாக கல்வி அறிவியில் பின் தங்கியிருந்தது. அதற்கு காரணம் குறித்து விசாரித்த போது மாணவர்கள் அதிக விடுப்பு எடுத்து இருப்பதே அதற்கு முதல் காரணமாக அமைந்துள்ளது.
இந்த ஆண்டு முதல் மாணவர்களை கல்வி அறிவில் உயர்த்த வேண்டும் எனும் நினைத்த சவுதி அரசு “விஷன் 2030” என்ற பெயரில் சவுதி சமூகத்தை நவீனமாக்கும் வகையில் பல சீர்த்திருத்தங்களை செய்து வருகிறது.
அதன் படி சவுதியில் அனைத்து பள்ளியிலும் மாணவர்கள் 20 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தால்.., அவர்களின் பெற்றோருக்கு சிறை என்ற ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
அரசின் இந்த புதிய அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மாணவர் 3 நாட்கள் தொடர் விடுமுறை எடுத்தால் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இருந்து பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடப்படும், எச்சரிக்கை நோட்டீஸ் பெற்றும் தொடர்ந்து விடுமுறை எடுத்தால் கட்டாயம் சிறை செல்ல வேண்டி இருக்கும் என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..