பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு..!!
நேற்று பழனி மலை முருகன் கோவிலில் மார்கழி மாதம் வரும் கார்திகையை முன்னிட்டு.., முருகருக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜையும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மலைக்கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. திருவிளக்கு பூஜையில், சிறுவர்கள், திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் வயதானவர்கள் என பல்வேறு பக்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
திருவிளக்கு பூஜையை தொடர்ந்து தங்கரத புறப்பாடு நடைபெற்றுள்ளது. கோடை விடுமுறை என்பதால்.., அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி