தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தங்கம் தென்னரசு தாக்கல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
சுமார் 2.07 மணி நேரம் உரையாற்றிய தங்கம் தென்னரசு, பல்வேறு புதிய திட்டங்களையும், விரிவாக்க திட்டங்களையும் அறிவித்தார்.
அப்போது, 2023-24ம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்காமல் 3.46%-ல் இருந்து 3.45% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், வரும் நிதியாண்டில் மேலும் 0.01 விழுக்காடு குறைக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
தேசிய பேரிடர் நிவாரணத்திலிருந்து எந்த நிதியும் தற்போது வரை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, காட்சி கெளியன் கடுஞ்சொல்லான் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்’ என்ற திருக்குறளை கூறி முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து பேசி தனது பட்ஜெட் உரையை தங்கம் தென்னரசு தொடங்கினார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.