விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தில் முக்கிய பிரபலம் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், சமீபத்தில் வெளியான டீசர் படத்திற்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விக்ரமுக்குப் பிறகு லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் படம், எல்.சி.யு-வின் பாகமாக உருவாகும் படம் என்பதால் வேறு யாரெல்லாம் இந்த படத்தில் இணைய உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக அதிகார பூர்வ தகவல் வெளியானது. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், கெளதம் மேனன், ஆக்சன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான், உள்ளிட்ட பலர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஆயுதபூஜை விருந்தாக அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது சஞ்சய் தத் இந்த படத்தின்படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலம் லியோ படத்தில் விஜய் நடிக்க உள்ள கெட்டப் வெளியாகியுள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் செம்ம மாஸாக இருக்கும் தளபதி விஜய்யின் வீடியோ சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு ஷேர் ஆகி வருகிறது.
வீடியோ இதோ…
https://twitter.com/7screenstudio/status/1634495457627099139