ஜெயம் ரவி-ஆர்த்தி தம்பதியினர் விவகரத்தா..? உண்மை தவல் இது தான்…!
நட்சத்திர தம்பதியினர் விவாகரத்து செய்யும் செய்திகள் தொடர்ச்சியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக, சமந்தா-நாக சைத்தன்யா, தனுஷ்-ஐஸ்வர்யா, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஆகியோர், இதுவரை விவாகரத்து செய்திருக்கின்றனர்.
இந்த லிஸ்டில் தற்போது நடிகர் ஜெயம் ரவி இணைய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் பொய் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. அதாவது
ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியினர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பேச்சு அடிபட்டது. இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு சூழல் ஏற்ப்பட்டது.
இந்த விவாகரத்து செய்தகளுக்கு ஜெயம் ரவி அமைதி காத்து வந்ததால் பலரும் இது உண்மை தானோ என்று எண்ணினர்.
ஆனால் அவரது மனைவி ஆர்த்தி இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது சமூக வளைத்தல பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதன்படி ஜெயம் படம் ரிலீஸாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை குறிப்பிடும் விதமாக உருவாக்கப்பட்ட போஸ்டர் ஒன்றை தன்னுடைய சமூக வளைத்தல பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதொடு ‘காதல் என்னும் வார்த்தை; அது வார்த்தை அல்ல வாழ்க்கை’ என்று கேப்ஷனையும் வழங்கியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகிி வருகிறது.
-பவானி கார்த்திக்