தளபதி 50வது பிறந்தநாள் கொண்டாட்டம்..! அசத்திய தொண்டர்கள்..!
வருகின்ற ஜூன் 22ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான தளபதி விஜய் தனது 50வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.
கடந்த ஆண்டு “தமிழக வெற்றிக் கழகத்தை” தளபதி விஜய் துவங்கி வைத்தார்.., துவங்கப்பட்ட நாளில் இருந்தே மக்களுக்கான பல்வேறு சலுகைகளை அவர்கள் செய்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் துவங்குவதற்கு முன்னரே “விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் உணவகம், நூலகம், பாட சாலை திட்டம், மருத்துவம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவந்தனர்.
அதனை தொடர்ந்து இன்று தளபதி அவர்களின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு கழகப் பொதுசெயலாளர் திரு. N ஆனந்து, அவர்களின் வழிகாட்டுதலின்படி, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி வழக்கறிஞர் R.திலீப்குமார் தலைமையில்
ராம்நகர் 120வது வட்ட நிர்வாகி பிரசாந்த் ஏற்பாட்டில் மக்கள் பயன் பெறும் மாபெரும் வகையில் இன்று இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது. இதனை தமிழக வெற்றிக் கழகம் தென் சென்னை மாவட்டம் திநகர் அப்புனு அண்ணன் கலந்துக்கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வட்டநிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், கலந்துக்கொண்டனர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவம் பார்த்து பயன்பெற்று சென்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..