ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் 27 பேரை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் வழிமறித்து மிக கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் ஒட்டுமொத்தமாக உலக நாடுகளையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நேற்று மாலை பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்து, பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே சுற்றுலா பயணிகளை சரமாரியாக சுட்டுள்ளனர். பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பஹல்காமில் நடந்த இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. முக்கியமாக ஒவ்வொருவரையும் சுடும் முன் அவர்கள் இந்துக்களா ? என்பதை உறுதி செய்ய கீழ் பகுதி ஆடையை கழற்றி பார்த்துவிட்டு சுட்டுக்கொன்றுள்ளனர்.
குழந்தைகளோடு இருக்கும் கணவன் – மனைவிகளில் , கணவனை மட்டும் குறி பார்த்து சுட்டு உள்ளனர். அதிலும் பெண் ஒருவரை சுடாமல்.. நான் ஏற்கனவே பல பெண்களை சுட்டுவிட்டேன். உன்னை விடுகிறேன். நீ போய் மோடியிடம் இதை சொல் என்றும் பேசியுள்ளனர்.
இந்த தாகுதலில் 6 தீவிரவாதிகள் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. பிரதமர் மோடிநேற்று சவுதி அரேபியா சென்ற நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து , சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு அவர் தாய்நாடு திரும்புகிறார்.