ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தாஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் உள்ள கல்வி நிறுவனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான பெண்கள் காயமடைந்தனர்.வெள்ளிக்கிழமை நடந்த இந்த தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் என காபூலில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Kabul 💔💔 😢😢🤲🏻🤲🏻 #DontKillEducation 🙏🙏 pic.twitter.com/mxmRFsswmc
— Rashid Khan (@rashidkhan_19) September 30, 2022
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்வீட் செய்துள்ளார். அதில் காபூலின் தாஷ்ட்-இ-பார்ச்சியில் உள்ள காஜ் கல்வி மையத்தில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து நாங்கள் வருத்தமடைகிறோம், மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலை தெரிவிக்கிறோம் என்று ட்விட்டரில் கருத்து கூறியுள்ளனர்.
We are saddened by yesterday's terror attack at the Kaaj Educational Center in Dasht-e-Barchi, Kabul and extend our condolences to the families of the victims.
Indian strongly condemns the continued targeting of innocent students at educational places.
— Randhir Jaiswal (@MEAIndia) October 1, 2022
கல்வி கற்பிக்கும் இடங்களில் அப்பாவி மாணவர்கள் தொடர்ந்து குறி வைக்கப்படுவது இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது என்று கூறினார். அதேபோல் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் ஆப்கனில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் குறிப்பிட்டு ‘கல்வியைக் கொல்லாதீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்கும், ஹிஜாப்க்கு எதிராக ஈரானில் பெண்கள் போராட்டத்தை முன்னெடுக்க, ஆப்கனில் பெண்கள் உரிமை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.