அரியலூர் அருகே பயங்கர தீ விபத்து..!! விபத்து குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்..!!
அரியலூர் அருகே விரகாலூர் கிராமத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.., இன்று அதிகாலை திடிரென தீ விபத்து ஏற்பட்டது.. இந்த தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்..
அரியலூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் உள்ள வயல் பகுதியில் நாட்டு வெடி தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் வழக்கமான பணியாளர்கள் வேலை தொடங்கியுள்ளனர் அப்போது 5 நபர்கள் மட்டும் வேலை செய்து வந்த நிலையில். திடீரென அந்த ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதில் ஒருவரின் உடல் மட்டும் சுமார் 200 அடி தூக்கி வீசப்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கும்.., மருத்துவமனைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பெயரில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 3 நபர்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.
மேலும், ஒருவர் இந்த தீ விபத்தால் பேர் அதிர்ச்சிக்கு உள்ளானதால் இந்த சம்பவம் குறித்து அவரால் பேச இயலவில்லை.
மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போதே உண்மை சம்பவம் வெளியானது.., வெடி தயாரிக்கும் இடத்தில் தீ குச்சி ஒன்று இருந்துள்ளது.., அதை யாரேனும் எரிந்து இருப்பார்களா என போலீசார் சந்தேகத்தின் பெயரில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.. மேலும், இந்த தீ விபத்து அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..