தென்காசி ஆட்டோ விபத்து..!! முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணநிதி அறிக்கை..!!
தென்காசியில் லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்த3 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தென்காசியில் நேற்று விவசாயப் பணிக்காக ஆட்களை ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோ திருச்சிற்றம்பலத்தில் இருந்து ஆனைகுளத்திற்கு செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அதில், 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து ததகவலறிந்த “முதலமைச்சர் ஸ்டாலின்” விபத்தில் உயிரழந்த பெண்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கபடும் என அறிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டிருபதாவது..
வீரகேரளம்புதூர் வட்டம். சுரண்டை காவல் சரகம் ஆணைகுளம் கிராமத்திற்கு இன்று (28.08.2024) காலை சுமார் 06.00 மணியளவில் விவசாய வயல் வேலைக்காக 17 நபர்கள் நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நான்கு சக்கர வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபந்துக்குள்ளானது இதில் வாகனத்தில் பயணம் செய்த தென்காசி வட்டம். திருச்சிற்றம்பலம் கிராமம், பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த திருமதி.வள்ளியம்மாள் (வயது 50) க/மொடசாமி. திருமதியிச்சி (வயது 60) க/பெதங்கமணி மற்றும் திருமதி ஜானகி (வயது 52) க/பெ.ஆறுமுகம் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும். வேதனையும் அடைந்தேன். மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 14 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாயும். பலத்த காயமடைந்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தவா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என இவ்வாறே அந்த அறிக்கையில் குறிபிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..