மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கல் காரணமாக எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கோயில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பழமையான சித்தி கணேசர் நடராஜ பெருமாள் துர்கை அம்மன் கோவிலுக்கு சொந்தமான கல்யாண மண்டபத்தை நிர்வகிப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, மக்கள் ஒரு காலத்தில் தங்களது சொத்துகளை கோயிலுக்கு தானமாக அளிக்கும் பழக்கம் இருந்ததாகவும், தற்போது கோயில் சொத்துகளை அபகரிப்பது மற்றும் சுரண்டுவது பயத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.